
‘குயின்’ படம் தமிழ், கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. இயக்குனர் ரமேஷ் அரவிந்த் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் கங்கனா ரனாவத் கதாபாத்திரத்தில் தமிழில் காஜல் அகர்வாலும், கன்னடத்தில் பருள் யாதவும் நடிக்கவிருப்பதாக இயக்குனர் ரமேஷ் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு பாலிவுட்டில் விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளிவந்த “குயின்’ படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
பெண்களின் உணர்வுகளை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. கதாநாயகிக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கின்ற, திருமணம் முடிந்து தேனிலவுக்கு பாரிஸ் செல்லவும் ஏற்பாடாகியிருக்கும் நிலையில் மாப்பிளை திருமணத்தை நிறுத்திவிடுகிறார். இதனால் மிகுந்த மணஉளைச்சலுக்கு உள்ளாகும் கதாநாயகி தேனிலவுக்காக ஏற்பாடு செய்திருந்த பாரீஸ் பயணத்திற்கு தனியாக பயணம் செய்வதுதான் இப்படக்கதை.
சுகாஷினி வசனத்தில் ரேவதி இயக்கத்தில் தமன்னா நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்படிருந்தது. ஆனால் பல காரணங்களால் பட வேலைகள் தொடங்காமல் தள்ளிப்போனது.
இந்நிலையில் இயக்குனர் ரமேஷ் அரவிந்த் இப்படத்தை இயக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார். இப்படத்தில் கங்கனா ரனாவத் கதாபாத்திரத்தில் காஜல் அகர்வாலும், மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் ஏமி ஜாக்சென்னும் நடிக்கிறார்.
இதுகுறித்து இயக்குனர் ரமேஷ் அரவிந்த் கூறுகையில்,
உத்தம வில்லன் படத்திற்கு பிறகு மீண்டும் தமிழில் இயக்குவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். குயின் போன்ற பெண்களின் உணர்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தை ரீமேக் செய்வதன மூலம் ஆண் பென் சமநிலைக்கு மதிபளிப்பதாக உணர்கிறேன். மேலும் இத்திரைப்படத்தில் சர்வதேச குழுவுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.
தற்போது கன்னட மொழியில் கதாபாத்திர தேர்வுகள் முடிந்து நேற்று இந்த படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.
மேலும் இரண்டு மொழிகளிலும் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.