
கும்பகோணம் அருகே ஒரு கிராமத்தில் பிறந்த ரமேஷ் அரவிந்த், சினிமா மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக நடிகர், எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என தன்னுடைய திறமைகளை வளர்த்துக்கொண்டு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
இவர் தமிழ் மட்டும் இன்றி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
ரமேஷ் அரவிந்த் நடிகர் கமலஹாசனுடன் நடித்த சதிலீலாவதி திரைப்படம் இன்று வரை தமிழ் ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று. மேலும் இவர் பிற மொழிகளில் நடித்த டூயட், அமெரிக்கா, நம்மூர மந்த்ரா ஹூவே, உல்டா பல்டா, ஹூமளே அம்ருத வர்ஷினி உள்ளிட்ட பல படங்கள் மிகபெரிய ஹிட்.
தமிழகத்தில் பிறந்தாலும், வேலை காரணமாக கர்நாடகாவில் செட்டில் ஆன இவர், நேற்று கர்நாடகாவில் நடந்த தேர்தலில் ஓட்டளித்த பிறகு தன்னுடைய கடமையை முடித்து விட்டதாகவும் தன்னுடைய மகள் முதல் முறையாக ஓட்டு போட்டுள்ளதாக கூறி மகளுடம் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டர் பகுதியில் பதிவிட்டுள்ளார்.
முதல் முறையாக தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படத்தை இவர் வெளியிட்டு உள்ளதால், இதைப்பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய அழகான மகளா என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.