
தனது ’லட்சுமி என்.டி.ஆர்’படத்துக்கு விஜயவாடாவில் நடுரோட்டில் பத்திரிகையாளர் சந்திப்பு வைக்கப்போவதாக அறிவித்திருந்த இயக்குநர் ராம்கோபால் வர்மாவை போலீஸார் தடுத்தி நிறுத்தி அவரை வலுக்கட்டாயமாக ஹைதராபாத்துக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.
சர்ச்சைகளுக்குப் பெயர் போன ராம்கோபால் வர்மா முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ஆரின் இரண்டாவது மனைவியான லட்சுமி பார்வதி குறித்து ‘லட்சுமி என்.டி.ஆர்’ என்ற படத்தை இயக்கி பலத்த எதிர்ப்புகளுக்கிடையே தெலங்கானாவில் மட்டும் ரிலீஸ் செய்தார். ஆந்திராவில் இப்படம் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. ஒருவரால் தேர்தலைக் காரணம் காட்டி தடை வாங்கப்பட்டது.
இத்தடை தனது முதுகில் குத்தும் செயல் என அறிவித்து தொடர்ந்து தனது ட்விட்டர் பதிவிகளில் தெரிவித்து வந்த நேற்று ஒரு முக்கிய பதிவு போட்டார். அதில் ‘என் படத்திற்குச் செய்யப்படும் துரோகத்தை எதிர்த்து இன்று மாலை 4 மணிக்கு விஜயவாடாவில் நடுத்தெருவில் பத்திரிகையாளர் மற்றும் எனது ஆதரவாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். அனைவரும் வாருங்கள்’ என்று கூறியிருந்தார்.
அதையொட்டி உஷாரான போலீஸார் ராம் கோபால் வர்மாவையும் அவரது தயாரிப்பாளரையும் விமான நிலையத்திலேயே முற்றுகையிட்டு கைது செய்தனர். பின்னர் நடுத்தெருவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை என எச்சரித்து விஜயவாடாவுக்குள் நுழைய விடாமல் வலுக்கட்டாயமாக ஹைதராபாத்துக்குத் திருப்பி அனுப்பி வைத்தனர். வேறு வழியின்றி பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து செய்வதாக அறிவித்த வர்மா தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் போலீஸ் அராஜகம் ஒழிக என்று கோஷம் போட்டு வருகிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.