
கடந்த வருடம் ஹைதராபாத்தில், தன்னுடைய இருசக்கர வாகனம் பழுதானதால் ரோட்டோரம் நின்றுகொண்டிருந்த, பெண் மருத்துவருக்கு உதவி செய்வது போல் வந்து, அவரை லாரி ஓட்டுநர்கள் நான்கு பேர் கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் நாடுமுழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தீவிரமாக விசாரணை செய்து வந்த காவலர்கள், ஹைதராபாத் பெண் மருத்துவர் வழக்கில் சம்பந்தமுடைய, நான்கு பேரை போலீசார் மடக்கிப்பிடித்து, அவர்களை என்கவுண்டரில் கொலை செய்தனர்.
இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், மக்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் மத்தியிலும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில் ஹைதராபாத் பெண் மருத்துவர் பற்றிய உண்மையை படமாக்க உள்ளதாக பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா அவருடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறியுள்ள அவர் நிர்பயா பாலியல் வழக்கிற்கு பின், ஹைதராபாத் பெண் மருத்துவருக்கு நடந்துள்ள இந்த சம்பவத்தை படமாக்கி, படத்தின் மூலம் அவர்களுக்கு பாடம் கற்பிக்க உள்ளதாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.