
நடிகை ரகுல் ப்ரீத் சிங், ஆரம்ப காலத்தில் தமிழில் நடித்த படங்கள் கை கொடுக்க வில்லை என்றாலும், தெலுங்கிற்கு சென்று தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தி கொண்டார். ஆனால் ஏற்றி விட்ட ஏணியை மறந்து விட்டு தற்போது டப்பு தான் முக்கியம் என கூறி வருகிறாராம்.
இவருக்கு திரையுலகில் கிராக்கி ஏற்பட்டுள்ளதால், அம்மணி நடிக்கும் அனைத்து படங்களிலும் தன்னுடைய சம்பளத்தை கணிசமாக ஏற்றி சொல்லி வருகிறாராம். மேலும் டோலிவுட், கோலிவுட்டை தாண்டி பாலிவுட் திரைப்படமும் இவர் கைவசம் வந்துள்ளது.
இதனால் கதை சொல்ல வரும் இயக்குனர்கள், மற்றும் தயாரிப்பாளர்களிடம் மட்டும் அல்லாமல், ஏற்கனவே நடிக்க ஒப்புக்கொண்ட படங்களில் கூட சம்பளத்தை ஏற்றி கொடுத்தால் தான் நடிப்பேன் என இவர் கூற, அதன் விளைவாக இரண்டு படங்களில் இருந்து இவரை தூக்கி போட்டு விட்டார்களாம்.
இவர் தெலுங்கில் 'ராட்சசன்' பட ரீமேக்காக எடுக்கப்பட்டு வரும் 'ரைடு' படத்தில் பெல்லகொண்ட சீனிவாசராவ் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். அதே போல் நடிகர் நாகசைதன்யாவிற்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்க இருந்தார். இந்த இரண்டு படத்திலும் தான் நடிக்க வேண்டும் என்றால் சம்பளம் ஏற்றி தர வேண்டும் என இவர் கறாராக கூற இரண்டு படத்திலும் இருந்து இவரை நீக்கி விட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், இதெல்லாம் பொய்... தன்னுடைய கைவசம் 5 படங்கள் உள்ளது என காலரை உயர்த்தி சொல்லி கொள்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.