போதை பொருள் வழக்கில் விசாரணைக்கு ஆஜர் ஆன ரகுல் ப்ரீத் சிங்!!

Published : Sep 03, 2021, 10:33 AM IST
போதை பொருள் வழக்கில் விசாரணைக்கு ஆஜர் ஆன ரகுல் ப்ரீத் சிங்!!

சுருக்கம்

போதை பொருள் வழக்கு விசாரணைக்காக ஹைதராபாத் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நடிகை சார்மி கவுர் ஆஜரான நிலையில், இன்று நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆஜராகியுள்ளார்.  

போதை பொருள் வழக்கு விசாரணைக்காக ஹைதராபாத் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நடிகை சார்மி கவுர் ஆஜரான நிலையில், இன்று நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆஜராகியுள்ளார்.

போதைப்பொருள் வழக்கில் நடிகை ராகுல் பிரீத் சிங் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். போதை மருந்து விவகாரத்தில் பல தெலுங்கு திரைப்பட இயக்குனர்கள், நடிகர், நடிகைகளுக்கு தொடர்புள்ளதாக கடந்த 2017 ஆம் ஆண்டு முதலே, இயக்குனர் பூரி ஜெகநாதன், சார்மி கவுர், ரகுல் ப்ரீத் சிங், ராணா, நவ்தீப் ரவிதேஜா உள்பட 12 பிரபலங்கள் சாட்சியாக மட்டுமே சேர்க்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

போதை மருந்து விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட, கெல்வினிடம் கலால் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, அவரது செல்போனில் இருந்து தெலுங்கு திரைப்பட நடிகர், நடிகைகள், சிலரது எண்களை கைப்பற்றினர். அதன் அடிப்படையில்  இவர்களுக்கெல்லாம் போதை மருந்து சப்ளை செய்தாரா? என்பது குறித்து பல்வேறு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

தற்போது இந்த வழக்கில் பண மோசடியும் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளதால் இந்த வழக்கை மீண்டும் விசாரித்து வருகிறார்கள்.  இது தொடர்பாக ஏற்கனவே பிரபல இயக்குனர் பூரி ஜெகநாதன், சார்மி  ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று பிரபல நடிகை ராகுல் ப்ரீத்தி ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகி உள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?