'கல்கி 2898 AD' படத்தை பார்த்த சூப்பர் ஸ்டாரின் ரியாக்ஷன்! எந்த படத்திற்கும் போடாத கமெண்ட்? வைரல் ட்வீட்!

Published : Jun 29, 2024, 11:53 AM IST
'கல்கி 2898 AD' படத்தை பார்த்த சூப்பர் ஸ்டாரின் ரியாக்ஷன்! எந்த படத்திற்கும் போடாத கமெண்ட்? வைரல் ட்வீட்!

சுருக்கம்

'கல்கி 2898 AD' படத்தை பார்த்த பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இதுவரை எந்த ஒரு படத்திற்கும் போடாத பதிவை, பதிவிட்டுள்ளதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.  

பான் இந்தியா ஸ்டாராக அறியப்படும் நடிகர் பிரபாஸ் நடித்த 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியாகி தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. தொடர் தோல்வியால் துவண்ட பிரபாஸுக்கு 'சாலார்' படத்தின் மிதமான வெற்றி நிம்மதி கொடுத்தாலும், 'கல்கி 2898 AD' படத்தின் வெற்றி தான் எனர்ஜி பூஸ்ட்டராக மாறியுள்ளது.

முதல் நாளே இப்படத்தின் வசூல் 200 கோடியை எட்ட வாய்ப்புள்ளது என சில வணிக ரீதியான தகவல் வெளியான நிலையில், பின்னர் 'கல்கி' பட தயாரிப்பு நிறுவனமான வைஜெந்தி மூவிஸ் அதிகார பூர்வமாக இப்படம் ஒரே நாளில் 191.5 கோடி வசூலித்துள்ளதாக கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்தது. மேலும் இரண்டே நாட்களில் இப்படம் சுமார் 350 கோடி வசூலை கடந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

Vijay: 50 வயதிலும்... 10 மணிநேரம் அசராமல் நின்று பரிசு வழங்கிய தளபதி! நிகழ்ச்சி முடியும் வரை மாறாத புன்னகை!

ரூ.600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், பிஸ்னஸ் ரீதியாகவும், சேட்டலைட், மற்றும் டிஜிட்டல் உரிமை போன்றவற்றிலே பல கோடி லாபம் ஈட்டிய நிலையில், 5 நாட்களில் 600 கோடி வசூலை எட்டிவிடும் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் மட்டும் இன்றி பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களையும், கருத்தையும் தெரிவித்து வருகிறார்கள். 

அந்த வகையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 'கல்கி 2898 AD' படத்தை பார்த்து விட்டு... ரசிகர்களே ஆச்சர்யப்படும் விதத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அந்த பதிவில் ரஜினிகாந்த் கூறியுள்ளதாவது, "கல்கி படத்தை பார்த்தேன். வாவ் என்ன ஒரு வரலாற்று படம். இயக்குனர் நாக் அஸ்வின் இந்த படத்தின் மூலம் இந்திய சினிமாவை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டார். என் நண்பர்கள் அஸ்வின் தத், அமிதாப் பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன் அனைவருக்கு என் மனதார வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இரண்டாவது பாகத்திற்காக வெயிட் பண்ணுவதாக கூறி ரசிகர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விக்கி இல்லாமல்... 'நேசிப்பாயா' பட விழாவில் கலந்து கொண்டு போஸ்டர் லான்ச் செய்த நயன்தாரா! வைரல் போட்டோஸ்!

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!