தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், திடீரென தூத்துக்குடி விமான நிலையம் வந்தபோது அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் லால் சலாம். இப்படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். பொங்கலுக்கு திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருந்த இப்படம் கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. பொங்கலுக்கு பதிலாக இப்படத்தை ஜனவரி 26-ந் தேதி வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
லால் சலாம் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தில் ரஜினி உடன் அமிதாப் பச்சன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், பகத் பாசில், ராணா டகுபதி, விஜய் டிவி ரக்ஷன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அண்மையில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளன்று வேட்டையன் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அந்த டீசர் செம்ம மாஸான தோற்றத்தில் காட்சியளித்தார் ரஜினி. இப்படி ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும் சென்னை வெள்ளம் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு உள்ளான பகுதிகளுக்கு நிவாரண பொருட்களையும் அனுப்பி வைத்தார் ரஜினி.
இந்த நிலையில், இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் திடீரென தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்திறங்கினார். அங்கு ரஜினி ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்துள்ளாரா என்கிற கேள்வியும் எழுந்து வந்தது. ஆனால் உண்மையில் அவர் வேட்டையன் படத்தின் படப்பிடிப்புக்காக அங்கு சென்றுள்ளார். ரஜினி விமான நிலையம் வந்தபோது எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... அய்யய்யோ பாத்துட்டாங்களே... முகத்தை மூடிக்கொண்டு பெண் உடன் தலைதெறிக்க ஓடிய விஷால் - வைரலாகும் வீடியோ