
தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் மற்றும் நடிகர் விஜய்யின் கரூர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்டத்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு ஏற்பட்ட அதிகப்படியான கூட்டமே தள்ளுமுள்ளுவுக்குக் காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 30க்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், திமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார். காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனும் விரைந்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மாண்புமிகு அமைச்சர் மா.சுப்ரமணியம் மற்றும் மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டுள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.
கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கும் நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இந்த சம்பவம் குறித்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள் என குறிப்பிட்டு உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.