
Ajith Fan Gift to TVK Vijay : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வாரந்தோறும் சனிக்கிழமைகளில் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இந்த வாரம் நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து திருச்சிக்கு தனி விமானத்தில் வந்த விஜய், பின்னர் சாலை மார்கமாக நாமக்கல்லுக்கு கிளம்பி சென்றார். அப்போது வழிநெடுக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், பிரச்சாரத்துக்கு செல்லும் வழியில் நடிகர் விஜய்க்கு அஜித் ரசிகர் அளித்த அன்புப் பரிசு ஒன்று கவனம் ஈர்த்துள்ளது. அதன்படி அஜித்தும், விஜய்யும் ஒன்றாக நடந்து வருவதுபோன்ற புகைப்படம் அடங்கிய போட்டோ பிரேமை விஜய்க்கு பரிசாக கொடுத்தார். அதில், ஏகே, டிவிகே என எழுதப்பட்டு இருந்தது. அந்த போட்டோ பிரேமை டக்குனு வாங்கிய விஜய், அதில் ப்ரியமுடன் விஜய் என குறிப்பிட்டு தன்னுடைய கையெழுத்தை போட்டு திரும்ப அந்த ரசிகரிடமே வழங்கினார்.
நடிகர் விஜய்யும், அஜித்தும் பல வருடங்களாக நட்புடன் பழகி வருகிறார்கள். இந்த சம்பவம் மூலம் தவெக-விற்கு அஜித் ரசிகர்களின் ஆதரவு இருப்பதும் வெட்டவெளிச்சம் ஆகிறது. விஜய்க்கு அஜித் ரசிகர்களின் ஆதரவும் இருப்பதால், அவர் 2026-ல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். நடிகர் அஜித்தே தன்னுடைய நண்பன் விஜய்க்கு வாக்களிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
நடிகர் விஜய் தற்போது சினிமாவை விட்டு விலகி அரசியலுக்கு வந்துள்ள நிலையில், நடிகர் அஜித் தற்போது சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி கார் ரேஸில் பிசியாக இருக்கிறார். இரு பெரும் உச்ச நட்சத்திரங்கள் தங்களுக்கு பிடித்த பாதையை நோக்கி நகர்ந்து வருகின்றனர். அதில் அவர்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் ஆசையாக உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.