
தமிழகத்திற்கு இந்த ஆண்டு யாராலும் மறக்க முடியாத துயர ஆண்டாக மாறியுள்ளது. நேற்று முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியது.
இதை தொடர்ந்து இன்று தலைசிறந்த மூத்த பத்திரிக்கையாளர், நடிகர், வழக்கறிஞர் என பல தோற்றம் கொண்ட சோ காலமானார் என்ற செய்தி பலரையும் மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சோ ரஜினியின் நெருங்கிய நண்பர் என்பது பலரும் அறிந்தது தான், கபாலி படத்தை அவருக்காக சிறப்பு காட்சி ரிலீஸ் செய்து அவருடைய கருத்துக்களை கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த துக்க செய்தியை அறிந்த ரஜினி முதல் ஆளாக வந்து தன் அஞ்சலியை செலுத்தினார், இது மட்டுமின்றி பிரபல இயக்குனர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.