2.0 இசை வெளியீட்டு விழாவுக்காக துபாய் பறக்கிறார் சூப்பர் ஸ்டார்!

First Published Oct 25, 2017, 8:02 PM IST
Highlights
rajinikanth today night fly for 2.0 audio launch


இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் ஆகியோர் நடித்து மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 2.0 .  

இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, துபாயில் 2 கோடி செலவில் நடக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இதில் இந்தியாவைச் சேர்ந்த மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று 9:45 மணிக்கு சென்னையில் இருந்து துபாய் புறப்படும் விமானத்தில் புறப்படுகிறார் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

மேலும் தற்போது, எமி ஜாக்சன் லண்டனின் உள்ளதால், அவர் அங்கிருந்து துபாய்க்கு வரவிருப்பதாகவும், அக்ஷய் குமார் மும்பையில் இருந்து வர உள்ளதாகவும் கூறியுள்ளனர். 

click me!