
ஈஷா மையத்தின் சார்பில் நதிகளை மீட்போம் என்கிற விழுப்புணர்வு பிரச்சாரம் கடந்த செப்டம்பர் 3 தேதி தொடங்கப்பட்டது. இந்த பிரச்சாரம் தொடர்ந்து அக்டோபர் 2 தேதி முதல் ஒரு மாதம் நடைபெறவுள்ளது.
நேற்று சென்னையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஈஷா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் கோலிவுட் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் கலந்துக்கொள்ள உள்ளதாக கூறப்பட்டது, ஆனால் முக்கிய வேலை காரணமாக அவர் வரவில்லை என அறிவித்து அவர் பேசிய ஒரு வீடியோ பதிவு ஒளிபரப்பப்பட்டது.
இந்த வீடியோவில், ரஜினிகாந்த் பேசுகையில் ரத்த நாளங்கள் இல்லை என்றால் உடலுறுப்புகள் இயங்காது. நதிகள் பூமியின் ரத்த நாளங்கள். அவற்றை பாதுகாக்க வேண்டியது நம் எல்லோருடைய கடமை. மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் ஜீவ நதியாக அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் நதிகளை இணைக்க, மாபெரும் முயற்சி மேற்கொண்டிருக்கும் சத்குருவிற்காக கடவுளை பிராத்தனை செய்வதாக அந்த வீடியோ பதிவில் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.