லக்னோவில் ரஜினி! சந்திக்க படையெடுக்கும் பா.ஜ.க நிர்வாகிகள்!

Published : Sep 11, 2018, 09:16 AM ISTUpdated : Sep 19, 2018, 09:22 AM IST
லக்னோவில் ரஜினி! சந்திக்க படையெடுக்கும் பா.ஜ.க நிர்வாகிகள்!

சுருக்கம்

பேட்ட படப்பிடிப்பிற்காக உத்தரபிரதேச மாநிலம் லக்னோ சென்றுள்ள ரஜினியை பா.ஜ.க நிர்வாகிகள் வரிசையாக சென்று சந்தித்து வருகின்றனர்.

பேட்ட படப்பிடிப்பிற்காக உத்தரபிரதேச மாநிலம் லக்னோ சென்றுள்ள ரஜினியை பா.ஜ.க நிர்வாகிகள் வரிசையாக சென்று சந்தித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் பேட்ட. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நடைபெற்றது. தற்போது படப்பிடிப்பு உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. லக்னோவில் உள்ள முக்கியமான இடங்களில் படப்பிடிப்பை கார்த்தி சுப்பராஜ் நடத்தி வருகிறார்.

ரஜினியின் படம் என்பதால் படப்பிடிப்பு நடத்த லக்னோ அதிகாரிகள் பெரிய அளவில் எந்த கெடுபிடியும் காட்டுவதில்லை. மேலும் பேட்ட படப்பிடிப்பு நடைபெறும் இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எல்லாம் மேல் ரஜினிக்கு என்று போலீசார் 10 பேர் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர். ரஜினி தங்கியுள்ள இடத்திற்கும் போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இதனிடையே படப்பிடிப்பின் இடைவெளியில் லக்னோவின் முக்கியஸ்தர்கள் ரஜினியை ஆர்வத்துடன் சந்தித்து செல்கின்றனர். ரஜினியும் எத்தனை பேர் வந்தாலும் அனைவரையும் சந்தித்து வழி அனுப்பி வைக்கிறார். 

அந்த வகையில் உத்தரபிரதேச மாநில பா.ஜ.க நிர்வாகிகள், லக்னோவை சேர்ந்த உள்ளூர் பா.ஜ.க பிரமுகர்களும் ரஜினியை ஆர்வத்துடன் சந்திக்க வருகின்றனர்.வருபவர்களை சந்திக்கும் ரஜினி உத்தரபிரதேச அரசியல் நிலவரம் குறித்து அவர்களிடம் விசாரித்துக் கொள்வதாக சொல்லப்படுகிறது.

 

மேலும் பா.ஜ.க நிர்வாகிகள் பலரும் ரஜினி எப்போது கட்சி ஆரம்பிக்க உள்ளார் என்றே கேள்வி எழுப்புகின்றனர். அவர்களிடம் ரஜினி அது ஆண்டவன் கைகளில் தான் உள்ளது என்று பதில் அளித்து வருகிறாராம். நாளுக்கு நாள் ரஜினியை சந்திக்க வரும் முக்கியஸ்தர்களின் கூட்டம் அதிகரிப்பதால், படப்பிடிப்பு நடைபெறுவது உத்தரபிரசேதத்திலா இல்லை தமிழகத்திலா என்று படக்குழுவினர் பேசிக் கொள்கிறார்களாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கார்த்திக்-ரேவதி உறவை முடிவுக்குக் கொண்டு வர... பஞ்சாயத்தைக் கூட்டிய சாமுண்டீஸ்வரி: அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!
கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ