
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா தனது முதல் கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் விவாகரத்து பெற்றார். ஒரு குழந்தை உள்ள நிலையில் மிக விரைவில் இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். முதல் திருமணம் பிரிவை உண்டாக்கிய நிலையில், இந்த திருமண வாழ்க்கையாவது நல்லபடியாக அமைய வேண்டும் என்று, சௌந்தர்யா பல்வேறு பிரார்த்தனைகளுக்காக கோயில்களுக்கு சென்று, பரிகார பூஜை மற்றும் தரிசனம் செய்து வருகிறார்.
இந்நிலையில்,குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அமைந்துள்ள சுசீந்திரம் தானுமாலயன் சுவாமி கோவிலில் சௌந்தர்யா சுவாமி தரிசனம் செய்தார். பரிகார பூஜைகளுக்காக குமரி மாவட்டம் வந்த அவர் குமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தானுமாலயன் கோவில் மற்றும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலிலும் பரிகார பூஜைகளை மேற்கொண்டார்.
இதனை அடுத்து சுசீந்திரம் வந்த அவர் மும்மூர்த்திகள் சன்னதி, நவகிரகங்கள், ஆஞ்சநேயர் சன்னதிகளில் நீண்ட நேரம் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தார், இரண்டாவது திருமணத்திற்கான மறுமண பரிகார பூஜைகளை செய்து வரும் சௌந்தர்யா, குமரி மாவட்டத்தில் உள்ள திருக்கோவில்களுக்கு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
தொடர்ந்து தமிழகத்திலுள்ள பல கோவில்களுக்கும் சென்று மறுமண பரிகார பூஜைகள் செய்ய இருக்கிறாராம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.