சினிமாவில் இருந்து விலகுவது தான் ரஜினிக்கு மரியாதை! தயாரிப்பாளர் அதிரடி...

Published : Jan 20, 2019, 10:30 AM ISTUpdated : Jan 20, 2019, 10:32 AM IST
சினிமாவில் இருந்து விலகுவது தான் ரஜினிக்கு மரியாதை!  தயாரிப்பாளர் அதிரடி...

சுருக்கம்

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில வருடங்களாக நடித்துவரும் படங்கள் சரியான வெற்றியை கொடுக்காததால், ரஜினி சினிமாவை விட்டு விலகுவது தான் அவருக்கு மரியாதை என தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

கடந்த 42 ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவை ஆட்சி செய்து கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஆனால் அவரது கடைசியாக நடித்த லிங்கா,கபாலி,காலா போன்ற படங்க அவ்வளவாக வெற்றி பெறவில்லை. இவ்வளவு ஏன் 500 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட 2.0 படம், முதல் பாகமான எந்திரன் அளவிற்கு கூட பிரபலமாகவில்லை படம் விமர்சன ரீதியாக பலத்த அடி. 

இப்படியான பல விமர்சனங்கள் ரஜினியின்  மீது வைக்கின்றனர் சினிமா விமர்சகர்கள். இதை தான் பிரபல தயாரிப்பாளரான கே.ராஜன் சமீபத்திய தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சியில் கூறியுள்ளார். 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் பேட்ட விஸ்வாசம் படைத்தன வசூல் நிலவரம் குறித்து நடத்திய விவாதத்தில் பங்கேற்ற தயாரிப்பாளர் கே.ராஜன், ரசிகர்களின் விருப்பம் மாறிவிட்டது. இதனால் ரஜினி சார் சினிமாவில் இருந்து விலகினார் என்றால் ரொம்ப பெரிய மரியாதையாக இருப்பார். அரசியல் பயணம் அறிவித்த கமல் இந்தியன் 2 படம் தன் கடைசிப்படம் என விலகுவது குறித்து அறிவித்துவிட்டார். அதைப்போல் ரஜினியும் விலகினால் மரியாதையாக இருப்பார் என கூறினார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்.. கேள்வி கேட்பான்.. ஈரோட்டில் கர்ஜித்த விஜய்
நண்பா இது நம்ம சர்க்கார்... தவெக பொதுக்கூட்டத்தில் கவனம் ஈர்த்த அஜித் பேனர் - வைரலாக்கும் தல - தளபதி ரசிகர்கள்