
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 30 ஆண்டுகளாக ஓட்டு போடாமல் இருந்து வந்த நடிகர் ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர், தற்போது முதன்முறையாக வாக்களித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் மகேந்திரன். 48 வயதாகும் இவர் சிறுவயதில் இருந்தே நடிகர் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார்.
ரஜினி அரசியலுக்கு வந்தால்தான் தனது முதல் வாக்கை செலுத்துவேன் என கடந்த 30 ஆண்டுகளாக வாக்களிக்காமல் இருந்து வந்துள்ளார். அவருடைய மனைவி தேர்தலில் போட்டியிட்டப்போது கூட மகேந்திரன் வாக்களிக்கவில்லையாம்.
நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவார் என கடந்த 30 ஆண்டுகளாக காத்திருந்தார் மகேந்திரன். ஆனால் இனி அரசியலுக்கு வரப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தது மகேந்திரனுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இதையடுத்து திமுக-வில் இணைந்த மகேந்திரன், தற்போது நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதன்முறையாக வாக்களித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.