
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
திரைப்பிரபலங்களும் காலை முதலே வந்து ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் இன்று காலை 7 மணியளவில் சென்னை நீலாங்கரையில் உள்ள வேல்ஸ் பள்ளியில் வாக்களித்தார். கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது பெரும் பேசுபொருளாக ஆன நிலையில், தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் சிவப்பு நிற சாண்ட்ரோ காரில் வந்து வாக்களித்தார்.
இந்நிலையில், வாக்களிக்க வந்தபோது நடிகர் விஜய் அங்கிருந்த மக்களிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் வந்தபோது அவரை போட்டோ பிடிக்க போட்டோகிராபர்கள் முண்டி அடித்ததால் அங்கு வாக்களிக்க வரிசையில் நின்ற பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது.
இதனை அடுத்து தன்னால் ஏற்பட்ட இடையூறுக்கு வரிசையில் நின்ற பொதுமக்களிடம் விஜய் கையெடுத்து கும்பிட்டபடி சாரி... சாரி என மன்னிப்பு கேட்டபடி செல்லும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், விஜய்க்கு என்ன ஒரு தங்கமான மனசு என பாராட்டி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.