#BREAKING ரஜினி இன்று மாலை டிஸ்சார்ஜ்... மருத்துவர்கள் போட்ட 3 கன்டிசன்கள்...!

By Kanimozhi PannerselvamFirst Published Dec 27, 2020, 4:10 PM IST
Highlights

சற்று நேரத்திற்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த அண்ணாத்த பட ஷூட்டிங்கின் போது 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தது. உடனடியாக அண்ணாத்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு நடிகர், நடிகைகள் அனைவரும் சென்னை திரும்பினர். இருப்பினும் ரஜினிகாந்த் ஐதராபாத்திலேயே தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார். 

இந்நிலையில் கடந்த 25ம் தேதி திடீரென ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து 3 நாட்களாக ரஜினிக்கு ரத்த அழுத்த மாறுபாட்டிற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரஜினிகாந்தின் உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது. சற்றுமுன் அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்த தகவலின் படி, ரஜினிகாந்திற்கு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்று காலை தான் வந்துள்ளன. பரிசோதனை முடிவுகளில் அவருக்கு பயம்படி ஒன்றிமில்லை என கூறப்பட்டுள்ளது.  மேலும், மருத்துவர்கள் குழுவானது ரஜினியை மீண்டும் பரிசோதனை செய்ய உள்ளதாகவும், அவரை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து பிற்பகலில் முடிவெடுப்பர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 


சற்று நேரத்திற்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ரஜினிகாந்த் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக கடந்த 25ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 
அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையுடன் தீவிர கண்காணிப்பு அளித்து வந்தனர்.  ரஜினியின் ரத்த அழுத்த மாறுபாடு சீராகி உடல்நிலை தேறியுள்ளது. எனவே இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். 

ஏற்கனவே அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுதாலும், அவருடைய வயதை வைத்தும் மருத்துவர்கள் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். கொரோனா தொற்று ஏற்படக்கூடிய சூழல்களை தவிர்க்கும் படியும், மன அழுத்தத்தை தவிர்க்க குறைந்தபட்ச பணிகளை மட்டும் ரஜினி மேற்கொள்ள வேண்டும் என்றும், உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஒருவாரம் ஓய்வி எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளனர். 
 

click me!