ரஜினி தலைக்கு மேல் தொங்கும் கத்தி.... இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 10, 2020, 11:45 AM IST
Highlights

இன்று காலை வழக்கை விசாரித்த எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பை பிற்பகல் 2.30 மணிக்கு வழங்குவதாக ஒத்திவைத்துள்ளது. 

கடந்த ஜனவரி 14-ஆம் தேதி துக்ளக் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளானது. 1971ம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணியின் போது ராமர், சீதை ஆகியோரின் உடையில்லா சிலை எடுத்துச்செல்லப்பட்டதாகவும், செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதாகவும் பேசியிருந்தார். 

இதையும் படிங்க: அப்பா, அம்மாவையே மிஞ்சிய குட்டி தங்கங்கள்... வைரலாகும் தல அஜித்தின் குடும்ப புகைப்படம்...!

இதையடுத்து பெரியார் குறித்து பொய்யான தகவல்களை பரப்புவதாகவும், பொது அமைதியை குலைக்கும் வகையில் ரஜினிகாந்த் பேசியதாகவும் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் 18ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதுவரை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதனால் சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் திராவிடர் விடுதலைக் கழக மாவட்டச் செயலாளர் உமாபதி சார்பில் இரண்டாவது முறையாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தோழியிடம் அத்துமீறிய அமலா பால்... கண்ட இடத்தில் கைவைத்து சில்மிஷம்... முகம் சுழிக்க வைக்கும் ஆபாச நடனம்...!

அந்த மனுவில் ரஜினி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்க எடுக்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது. வழக்கு விசாரணையின் போது வன்முறையை தூண்டும் விதமாக பேசுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை உமாபதி தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினர். 

மேலும் மத உணர்வை தூண்டி பெரியார் பெயருக்கு களங்கம் விளைத்து வன்முறையை தூண்ட முயண்ற ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை இன்று வழங்குவதாக ஒத்திவைத்திருந்தது. 

இன்று காலை வழக்கை விசாரித்த எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பை பிற்பகல் 2.30 மணிக்கு வழங்குவதாக ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கில் ரஜினி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்படுமா? அல்லது மனு தள்ளுபடி செய்யப்படுமா? என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரியவரும். 

click me!