தாயார் மரணம்... முதல்வர் பழனிசாமிக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் ஆறுதல்..!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Oct 13, 2020, 12:31 PM IST
தாயார் மரணம்...  முதல்வர் பழனிசாமிக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் ஆறுதல்..!

சுருக்கம்

தாயாரின் பிரிவால் வாடும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

​தமிழக முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி தாயார்  தவசாயி அம்மாள் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு வயது 93. இந்நிலையில் நள்ளிரவு காலமானார். கடந்த இரண்டு நாட்களாக சேலம் தனியார் (லண்டன் ஆர்த்தோ) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நள்ளிரவு 12.15  மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் கிராமத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

 

இதையும் படிங்க: இரவில் யாஷிகாவை தவிக்கவிட்டு தப்பியோடிய பாலாஜி முருகதாஸ்... கிழியும் பிக்பாஸ் பிரபலத்தின் முகமூடி..!

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது தாயாரின் மறைவு செய்தி கேட்டு சேலம் வந்தடைந்தார். அவரது உடல் தகனம் சிலுவம்பாளையம் இடுகாட்டில் இன்று காலை நடைபெற்றது. அமைச்சர்கள், அதிமுகவினர், கிராம மக்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

 

இதையும் படிங்க: தனுஷுக்கு ‘நோ’சொன்ன சாய்பல்லவி... சூப்பர் டூப்பர் ஹிட் படத்தில் தவறவிட்ட வாய்ப்பு...!

தாயாரின் பிரிவால் வாடும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வரின் அம்மா இறந்த செய்தியைக் கேள்விப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உடனடியாக எடப்பாடியாருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் தாயை இழந்து வாடும் முதல்வருக்கு ஆறுதல் கூறியுள்ளார். இதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்டோரும் முதலமைச்சரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்துள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!