
பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் கடந்த 2018ம் ஆண்டு முதல் புற்றுநோய்க்கு எதிராக போராடி வந்தார். நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் ஒன்றில் புற்றுநோய் சிகிச்சை பெற்று வந்த ரிஷி கபூர், கடந்த செப்டம்பர் மாதம் நாடு திரும்பினார். இந்நிலையில் நேற்று திடீரென அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 67 வயதாகும் ரிஷி கபூரின் திடீர் மறைவு திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்று ஹாலிவுட், பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான இர்ஃபான் கான் மரணம் இந்தியாவையே சோகத்தில் மூழ்கடித்தது. அந்த சோக நிகழ்வில் இருந்து திரைத்துறையினர் மீள்வதற்குள் இந்தியா சினிமாத்துறையை மற்றொரு மிகப்பெரிய சோகம் சூழ்ந்துகொண்டது.
இதையும் படிங்க: பெரிய இடத்து மாப்பிள்ளையாகும் பிரபாஸ்?... மெகா ஸ்டார் குடும்பத்து பெண்ணை கைபிடிக்க போறாராம்...!
இந்நிலையில் ரிஷி கபூர் மரண செய்தி கேட்ட சூப்பர் ஸ்டார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை பதிவிட்டுள்ளார். அதில், எனது இதயமே உடைந்து விட்டது... ஆத்மா சாந்தியடையட்டும்... என் நண்பர் ரிஷி கபூர்.. என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இதை நம்ப முடியவில்லை. சிண்டு ஜி எப்போதும் புன்னகையுடன் இருப்பார்... எங்களுக்குள் பரஸ்பர அன்பும், மரியாதையும் இருந்தது. எனது நண்பரின் மிஸ் செய்கிறேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று உலக நாயகன் கமல் ஹாசன் பதிவிட்டுள்ளார்.
பிரபல நடிகை குஷ்பு, இது உண்மையாக இருக்க கூடாது... யாராவது இது பொய்யான செய்தி என்று கூறுங்களேன்... என்று மிகவும் வருத்தத்தோடு பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.