நாக்கு தள்ளி அள்ளிய மொத்த வசூல் இவ்வளவு தான்... அப்போ 500, 600 கோடின்னு அள்ளி விட்டதெல்லாம் கபஸாவா?

By sathish kFirst Published Dec 10, 2018, 11:37 AM IST
Highlights

சுமார் 10000 தியேட்டரில் உலகம் முழுவதும் வெளியான  2.O இரண்டாவது வாரமாக ஓடிக்  கொண்டிருக்கிறது. நகர்புறங்களில் உள்ள 3D தியேட்டர்களில் மட்டுமே  சுமாரான வசூல் வருகிறது.  மற்ற தியேட்டர்களில் மந்தமான வசூலை எதிர்கொண்டுள்ளது. 

2.O படம் முதல்கட்ட வெளியீட்டில் வணிக ரீதியாக, வசூல் அடிப்படையில் படத் தயாரிப்புக்குச் செலவழித்த சுமார் 600கோடியை எடுக்க முடியவில்லை. அதே வேளையில் 2.O படத்தின் இரண்டாம்கட்ட வெளியீட்டில் அசலை வசூல் மூலம் மீட்டெடுக்கும் வாய்ப்பு உள்ளது.

முதல் நான்கு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.400 கோடி மொத்த வசூல். ஏழு நாட்களில் 500 கோடி ரூபாய்  அள்ளிவிட்டுக் கொண்டிருந்தனர். நான்கு நாட்களில் 400 கோடி ரூபாயும், எஞ்சிய மூன்று நாட்களின் மொத்த வசூல் 100 கோடி ரூபாயும் என கப்ஸா விட்டது தியேட்டருக்கு வரும் கூட்டத்தைப் பார்த்தாலே எத்தனை கோடி அள்ளியிருக்கும் என புரிகிறது.

படம் வெளியீட்டுக்கு முன்பே தொலைக்காட்சி உரிமை, டிஜிட்டல் உரிமை, ஆடியோ உரிமை மூலம் கிடைத்தது மட்டுமே தயாரிப்பாளர் விட்ட கண்ணீரை துடைத்து . தியேட்டரில் படங்களைத் திரையிட வடஇந்தியா, தெலுங்கு மாநிலம், கேரளா, கர்நாடகா மாநிலங்கள் மற்றும் FMS மூலம் லைகா விநியோகஸ்தர்களிடம் மினிமம் கேரண்டி, கூடுதல் அட்வான்ஸ் அடிப்படையில் ரூபாய் 370 கோடி வாங்கியுள்ளது.

இதில், தமிழ்நாடு - 60 கோடி, கர்நாடகா மாநிலம் - 26. 25 கோடி, கேரள மாநிலம் - 10 கோடி, இந்தி மொழி - 154.75  கோடி, தெலுங்கு பதிப்பு - 61.5 கோடி மற்றும்  வெளிநாடு (FMS) - 96 கோடி என மொத்த வசூல் - 398.50 கோடி தான். 

click me!