
தாதா சாஹிப் பால்கே விருது பெற உள்ள பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு நடிகர் ரஜினி காந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தி பட உலகின் சூப்பர் ஸ்டார் ஏற்கனவே பத்ம விருதுகள் பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் தாதா சாஹிப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்ட செய்தியில், “இந்திய திரைப்படத்துறையின் மிகவும் உயரிய விருதான தாதா சாகேப்பால்கே விருதுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து தாதா சாகேப் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அமிதாப்பச்சனுக்கு பாலிவுட் பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள். அமிதாப்பின் நெருங்கிய நண்பரான ரஜினியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “ பெரும் மதிப்புக்குரிய தாதா சாகேப் பால்கே விருதுக்கு அமிதாப் பச்சன் தகுதியானவர். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.