அமிதாப்பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது ! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு !!

Published : Sep 24, 2019, 08:07 PM IST
அமிதாப்பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது ! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு !!

சுருக்கம்

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன்  தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். திரைப்படத்துறையில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு அமிதாப் பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன்  ஏராளமான ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்றார். இவரின் கலைச்சேவையை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு அவருக்கு பத்ம விருதுகளை வழங்கியுள்ளது.

இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய திரைப்படத்துறையின் மிகவும் உயரிய விருதான தாதா சாகேப்பால்கே விருதுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பு பழம் பெரும் பாலிவுட் நடிகர்கள் திலீப்குமார், சசிகபூர், உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றுள்ளார். தமிழகத்தில் நடிகர் சிவாஜி கணேசன் கடந்த 1996 ஆம் ஆண்டும்,  இயக்குனர் பாலச்சந்தர் 2010 ஆம் ஆண்டும் இந்த விருதினை பெற்றுள்ளனர்.

தாதா சாகேப் விருதுக்கு அமிதாப் தேர்வு செய்யப்பட்டுள்ளதையடுத்து அவருக்கு பாலிவுட் பிரபலங்கள், பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!
என் வாழ்க்கையை அழிக்க இவர்கள் ரெண்டு பேர் போதும்: மர்ம முடிச்சைப் போட்ட மயில்; யார் அந்த ரெண்டு பேர்?