
நம்ம ஊர் எஸ்.வி.சேகர்களுக்கும் ஹெச்.ராஜாக்களுக்கும் தமிழ் மொழியின் அருமை தெரிகிறதோ இல்லையோ சில வடக்கிந்திய கலைஞர்களுக்கு தமிழின் தொன்மையும் அருமையும் எப்போதும் மிக நன்றாகத் தெரிந்தே இருக்கிறது.
தற்போது அமேஸானில் பரபரப்பைப் பற்றவைத்திருக்கும் ‘த ஃபேமிலி மேன்’ வெப்சீரிஸில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியை பாருங்கள். இந்தியாவின் தேசிய மொழி என்று பலரும் நம்பிக்கொண்டிருக்கும் நிலையில் அது தேசிய மொழிகளில் ஒன்று என்பதையும், சமஸ்கிருதத்தையும் விட தமிழ் எவ்வளவு தொன்மை வாய்ந்த மொழி என்பதையும் இயக்குநர்கள் டி.கே.வும் ராஜூம் போகிற போக்கில் எவ்வளவு சர்வசாதாரணமாக சொல்லிவிட்டுப்போகிறார்கள் என்று பாருங்கள்.
மனோஜ் பாஜ்பாயின் மனைவியாக சுசித்ரா என்ற தமிழ்ப்பெண்ணாக இந்த வெப்சீரிஸில் கலக்கிக் கொண்டிருப்பவர் நம்ம முத்தழகி பிரியாமணி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.