
அத்தி வரதரை நேற்றிரவு ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தரிசனம் செய்துள்ளனர்
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் சிலை மேலே எடுக்கப்பட்டு 48 நாட்கள் பொதுமக்களின் தரிசனத்திற்காக வைக்கப்படுவது வழக்கம். அதேபோல் 40 ஆண்டுகள் கழித்து கோவில்குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை கடந்த ஜூலை 1 தேதி முதல் பொதுமக்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. இதுவரை லட்ச கணக்கான மக்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர், மீண்டும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி அத்திவரதர்சிலை கோவில் குளத்தில் வைக்கப்பட இருக்கிறது.எனவே நாளை மறுதினம் 16 ஆம் தேதி வரை அத்திவரதரை தரிசித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான மக்கள் கோவிலுக்கு வந்து சென்றதில் இதுவரை ஆறு கோடியே 81லட்சம் ரூபாய்க்கு ரொக்கப் பணம் காணிக்கையாக விழுந்துள்ளது, 87 கிராம் தங்கமும், 2501 கிராம் வெள்ளியையும் பக்தர்கள் காணிக்கையாக வழங்கியுள்ளனர். இதனிடையே நேற்று இரவு யாரும் எதிர்பார்க்காத நிலையில் தன்னுடைய மனைவி லதா ரஜினிகாந்த் உடன் காஞ்சிபுரம் வந்த ரஜினிகாந்த் அத்தி வரதரை தரிசனம் செய்தார் அப்போது கோவில் நிர்வாகம் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்றனர். தரிசனம் முடித்தவுடன் நேற்று இரவே அவர் சென்னை திரும்பினார்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.