குட்டி பேரனின் க்யூட் ஆசையை நிறைவேற்றிட ரஜினி என்ன செய்திருக்கிறார் தெரியுமா?

Published : Oct 22, 2018, 01:08 PM IST
குட்டி பேரனின் க்யூட் ஆசையை நிறைவேற்றிட ரஜினி என்ன செய்திருக்கிறார் தெரியுமா?

சுருக்கம்

சின்னக்குழந்தைகள் ஏதாவது விரும்பி கேட்டால் அதை எப்படியாவது நிறைவேற்றிட வேண்டும் என்ற எண்ணம் தான் எவருக்குமே வரும். சூப்பர் ஸ்டாராகவே இருந்தாலும் பேரக்குழந்தைகள் என்று வந்து விட்டால், உருகித்தான் போவார்கள். இதற்கு சமீபத்தில் ரஜினி தனது பேரனுக்காக செய்திருக்கும் செயலே நல்ல உதாரணம்.

பிஸியான ஷெட்யூலில் பேட்ட படத்தில் நடித்து வந்த ரஜினி சமீபத்தில் தான் வீடு திரும்பி இருக்கிறார். அவரிடம் ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யாவின் மகன் வேத் தனது சின்ன ஆசையை தெரிவித்திருக்கிறார். குட்டி பையன் வேத்-க்கு ஆட்டோ என்றால் ரொம்ப பிடிக்குமாம். வீட்டில் என்ன தான் காஸ்ட்லீ கார் இருந்தாலும் வேத்-ன் ஆர்வம் ஆட்டோ மீது தானாம். 

இதனால் ஆட்டோவில் பயணம் செய்ய வேண்டும் என்ற தன் ஆசையை ரஜினியிடம் தெரிவித்திருக்கிறார் வேத். பேரனின் ஆசையை உடனடியாக நிறைவேற்றிட முடிவு செய்த ரஜினியும், ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து ஆட்டோவை வரவழைத்து அதில் தனது பேரனுடன், தனுஷின் வீட்டிற்கு பயணம் செய்திருக்கிறார்.ஏற்கனவே வேத்-ன் குட்டி க்யூட் செயல்களால் அவர் இணையத்தில் அதிக அளவிலான ரசிகர்களை சம்பாதித்திருக்கிறார். இதனிடையே வேத்-ன் இந்த க்யூட் ஆசை மற்றும் அதை நிறைவேற்றிட ரஜினி மேற்கொண்ட முயற்சி இப்போது அவருக்கு கூடுதல் ரசிகர்களை ஏற்படுத்தி தந்திருக்கிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!