செளந்தர்யா-விசாகன் திருமணத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் ரஜினி...

Published : Feb 12, 2019, 05:34 PM IST
செளந்தர்யா-விசாகன் திருமணத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் ரஜினி...

சுருக்கம்

தனது மகள் திருமணம் சிறப்பாக நடந்துமுடிந்திருக்கும் நிலையில், அத்திருமணத்தில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி முதல் காவல் துறை அதிகாரிகள் வரை அனைவருக்கும் நன்றி தெரிவித்து சற்றுமுன்னர் ஒரு அறிக்கை அனுப்பியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 

தனது மகள் திருமணம் சிறப்பாக நடந்துமுடிந்திருக்கும் நிலையில், அத்திருமணத்தில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி முதல் காவல் துறை அதிகாரிகள் வரை அனைவருக்கும் நன்றி தெரிவித்து சற்றுமுன்னர் ஒரு அறிக்கை அனுப்பியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 

ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா - விசாகன் திருமணம், நேற்று (பிப்ரவரி 11) சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. முன்னதாக, கடந்த 8-ம் தேதி கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் திருமண வரவேற்பு நடைபெற்றது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், கமல்ஹாசன், பார்த்திபன், சுந்தர்.சி, கே.பாக்யராஜ், பா.இரஞ்சித் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் எனப் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். துவக்கத்தில் மிக எளிமையாக நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட இத்திருமணம் அதிக வி.வி.ஐ.பி.களால் கலந்துகொள்ளப்பட்ட திருமணமாக மாறியது.

இந்நிலையில், திருமணத்துக்கு வருகைதந்து வாழ்த்திய அனைவருக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார் ரஜினி.

அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், ‘என் மகள் செளந்தர்யா, மணமகன் விசாகன் திருமணத்துக்கு வருகைதந்து வாழ்த்திய முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முகேஷ் அம்பானி குடும்பத்தினர், திருநாவுக்கரசர், அமர்நாத், கமல்ஹாசன் மற்றும் நண்பர்கள், உறவினர்கள், திரையுலகப் பிரமுகர்கள், ஊடக நண்பர்கள், காவல்துறை நண்பர்கள், திருமண விழாவுக்கு வந்து மணமக்களை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் கூறப்பட்டுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!