குட்டி கதை மூலம் திரைவிமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்த  ரஜினிகாந்த்...

First Published Apr 10, 2017, 5:46 PM IST
Highlights
rajini small story about movie reviewers


நடிகர் விக்ரம் பிரபு முதல் முறையாக தானே தயாரித்து, நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் 'நெருப்புடா' இந்த திரைப்படத்தின் இசை  வெளியீட்டு விழா வெகுவிமர்சியாக நடைபெற்றது. இந்த விழவில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், ரஜினிகாந்த், மற்றும் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஒரு குட்டிக்கதை மூலம் விமர்சனம் செய்பவர்களுக்கு  தனது பாணியில் ஒரு கருத்தை ஸ்வாரஸ்யமாகி கூறினார். 

அவர் கூறிய அந்த குட்டி கதை என்ன தெரியுமா....  ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவருக்கு நீண்ட நாட்களாக குழந்தை பிறக்கவில்யாம் அதனால் பல கோயில்கள் படி ஏறி, வேண்டியபின்னர் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 

குழந்தையின் ஜாதகத்தை தெரிந்து கொள்ள ஒரு ஜோசியரை அழைத்தாராம். அவர் அந்த குழந்தையை பார்த்து விட்டு , இந்த குழந்தையால் உங்களுக்கு ஒரு மரணம் ஏற்படும் என்று கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா, அந்த ஜோசியரை ஜெயிலில் போட்ட சொல்லி உத்தரவிட்டாராம். 

பின்னர் இன்னொரு ஜோசியரை அழைத்து அவரிடம் குழந்தையின் ஜாதகத்தை கணிக்க சொன்னாராம். அவர் குழந்தையின் ஜாதகத்தில் முன்னர் கூறிய ஜோசியர் கூறியது உண்மை என்பதை கண்டறிந்தாலும் அதை கூறாமல், அந்த குழந்தையின் எதிர்காலம் நன்றாக இருப்பதை அறிந்து அவர் ராஜாவிடம் இந்த குழந்தை உங்களை விட நூறு மடங்கும் புகழ் பெறுவார் என்று கூறினார். 

இதனால் மன்னர் மகிழ்ச்சி அடைந்து உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார். அவர் அதற்கு ஜெயிலில் உள்ள ஜோசியரை விடுதலை செய்யுங்கள், அதுபோதும் என்று கூறினார்.

எனவே ஒருவரிடத்தில் என்ன சொல்ல வேண்டும், எதை மறைக்க வேண்டும் என்பதை அறிந்து இரண்டாவது ஜோசியர் கூறியது போல் யார் மனதையும் புண்படுத்தாமல் விமர்சனம் செய்யுங்கள்' என்று ரஜினிகாந்த் இந்த குட்டிக்கதை மூலம் கூறியுள்ளார்.

click me!