"நெருப்புடா இசைவெளியீட்டு விழா"... தீயாய் பேசிய விஷால்...

 
Published : Apr 10, 2017, 02:09 PM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
"நெருப்புடா இசைவெளியீட்டு விழா"... தீயாய் பேசிய விஷால்...

சுருக்கம்

nerupuda movie audio launch vishal speech

நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு முதல் முறையாக தயாரித்து நடித்துக்கொண்டிருக்கும் 'நெருப்புடா' படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று நடந்தது. 

இந்த விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டனர், மேலும் இளைய திலகம் பிரபு, தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய நடிகர் சங்க பொது செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதும் பத்திரிகையாளர்களுக்கு அதிரடியாக வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது குறித்து அவர் பேசுகையில் 'ஒரு திரைப்படம் வெளிவந்தவுடன் தயவு செய்து மூன்று நாள் கழித்து நான்காவது நாள் விமர்சனம் செய்யும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஜர்னலிசம் என்பது ஒரு செய்தியை மக்களுக்கு விரைவில் கொண்டு போய் சேர்க்கும் ஒரு முக்கிய கருவி என்பது உண்மையென்றாலும் ஒரு மனிதத்தன்மையுடன் நான் கேட்டுக்கொள்வது மூன்று தினங்களுக்கு பின் விமர்சனம் செய்ய வேண்டும் என்பதுதான்.

ஒருசில விமர்சகர்கள் தங்களுடைய சொந்த கருத்தை தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த கருத்து போல ஒரு திரைப்படத்தின் விமர்சனத்தில் புகுத்துகின்றனர். 

அதுவும் முதல் காட்சி முடிந்தவுடனே இவ்வாறு விமர்சனம் எழுதுவதால் படத்தின் வசூல் பாதிக்கின்றது. எனவே ஒரு தயாரிப்பாளர் சங்க தலைவராக, ஒரு நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக, ஒரு நடிகராக, ஒரு மனிதராக திரைப்படங்களின் விமர்சனத்தை நான்காவது நாள் வெளியிடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்' என்று விஷால் அதிரடியாக கூறியுள்ளார்... ஆனால் இந்த கோரிக்கைகளை விரைவாக மக்களுக்கு விமர்சனங்களை கொடுக்க வேண்டும் என செயல்படும் ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் ஏற்று கொள்ளுமா? பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிரஞ்சீவி, மகேஷ் பாபு படங்களுடன் போட்டி; அரசியல் குறித்து சித்தார்த் விமர்சனம்!
நடிகை நிதி அகர்வால் மீது கைவச்சது யார்? அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்