
நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார், காஞ்சிபுரம், நீலகிரி,தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்து வருகிறார்.
நடிகா் ரஜினிகாந்த் சில மாதங்களுக்கு முன்னா் ரசிகா்களுடனான சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார். அந்த சந்திப்பில் 15 மாவட்ட ரசிகா்களை அழைத்து அவா்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அப்போதே அவா் அரசியலுக்கு வருவது தொடா்பான அறிவிப்பை வெளியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காலா படம் மற்றும் 2.0 படபிடிப்பு பணிகளுக்காக வெளிநாடு சென்று விட்டார்.
இந்நிலையில், ரஜினிகாந்த் தனது இரண்டாம் கட்ட ரசிகா்களுடனான சந்திப்பை இன்று முதல் வருகிற 31ம் தேதி நடத்தி வருகிறார். இன்று காலை 8.30 மணியில் இருந்து ரசிகர் சந்திப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தொடக்கத்தில் தயாரிப்பாளர் கலைஞானம் தனது அனுபவங்களை பேசினார். அதைத் தொடர்ந்து இயக்குநர் மகேந்திரன் பேசினார். தொடர்ந்து ரசிகர்கள் சந்திப்புநிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.