
கமல் 60’ கலை விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி பேசிய அரசியல் பேச்சு வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தர்பார்’பத்தின் டப்பிங்கை ரஜினி நிறைவு செய்துவிட்டார் என்ற தகவலை வெளியிட்டுள்ளார்.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினி, நயன்தாரா நடித்திருக்கும் ‘தர்பார்’பொங்கல் ரிலீஸுக்குப் பரபரப்பாக தயாராகி வருகிறது. இப்படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு ரஜினி டப்பிங் பேசத் த்வங்கியிருப்பதாக லைகா நிறுவனம் வெளியிட்ட புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகின.
இந்நிலையில் இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி அருகே மிக சாவகாசமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்,...என் வாழ்வில் நான் சந்தித்த முக்கியமான டப்பிங் செஷன்களில் ஒன்று...’தர்பார்’பட ட்ப்பிங் பணிகளை தலைவர் நிரைவு செய்துவிட்டார்...என்று பதிவிட்டிருக்கிறார். அப்புகைப்படத்தை வைரலாக்கி வரும் ரஜினி ரசிகர்கள்...பொங்கல் வரைக்கும் காத்திருக்க முடியாது. தலைவர்தான் பேசி முடிச்சிட்டார்ல...அப்ப படத்தை டிசம்பர்லயே ரிலீஸ் பண்ணுங்க’என்று ஆர்வக்கோளாறான கமெண்டுகளைப் போட்டுவருகிறார்கள். ரீரெகார்டிங் இல்லாம உங்க தலைவரோட ஸ்டைல்ஸ் எல்லாம் எடுபடாது பாஸ்...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.