
'தர்பார்' திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் ரஜினி ரசிகர்கள், படத்தை ஆரவாரத்தோடு வரவேற்க தயாராகி வருகிறார்கள். மேலும் படம் வெற்றி பெற, மதுரையை சேர்ந்த ரசிகர்கள் அலகு குத்தி, மண் சோறு சாப்பிடும் சம்பவங்களும் அரங்கேறி உள்ளது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த ரஜினி ரசிகர் மன்றம் சார்பாக, 'தர்பார்' திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என அலகு குத்தியும், மண் சோறு சாப்பிடும் தங்களுடைய நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.
இந்த பிராத்தனையை ஆறுபடை வீடுகளில்... முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தான் செய்துள்ளனர். ஜெயமணி, முருகவேல், கோல்டன் சரவணன் ஆகியோர் தான் 'தர்பார்' படத்தின் வெற்றிக்கு இந்த நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ளார்.
இதுகுறித்த, சில புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரஜினி ரசிகர்களால் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாக உள்ள 'தர்பார்' படம் இந்தியாவில் மட்டும் 4000 திரையரங்கங்களில் வெளியாக உள்ளதாகவும், உலகம் முழுவதும் மொத்தம் 7000 திரையரங்கங்களில் வெளியிட ஏற்பாடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.