
டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கருத்துக்கூற மறுத்துள்ளார், அரசியலுக்கு வரப்போகிறேன் என அவர் கூறிவரும் நிலையில் மாணவர்கள் தாக்கப் பட்டது குறித்த கேள்வியிலிருந்து வசதியாக நழுவியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது . ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார்.
இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் , ரஜினிகாந்த் காவலர் வேடத்தில் நடித்துள்ள இப்படம் 2020ல் திரையிடப்படவுள்ளது இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்து முடிந்துள்ள நிலையில் தமிழ் , தெலுங்கு , இந்தி ஆகிய மூன்று மொழிகளில் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நேற்று நடந்தது அப்போது நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார் . படம் தொடர்பாக பொறுமையாக பதில் அளித்து வந்த அவர் ரசிகர் ஒருவர் , குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடிய ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறித்து உங்களது கருத்து என்ன என்று கேள்வி கேட்டார் , அதுவரை பரபரப்பாக பதில் சொல்லி வந்த நடிகர் ரஜினிகாந்த் இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் ஆப் ஆனார்.
இது அதற்கான தளம் இல்லை என்று கருத்து கூற மறுத்துவிட்டார் . சட்டமன்றத் தேர்தலில் அரசியலில் குதிக்கப் போகிறேன் , தமிழகத்தில் வெற்றிடம் நிலவுகிறது சிஸ்டம் சரியில்லை என்று அடிக்கடி வசனம் பேசும் ரஜினி , மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் கருத்து சொல்லாமல் தந்திரமாக நழுவியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . சிலர் ரஜினி தன்னுடைய படங்கள் ஓட வேண்டும் என்பதற்காகத்தான் அரசியலை பேசுகிறாரே தவிர அவர் பேசும் அரசியல் மக்களுக்கானது அல்ல என விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.