
கோலிவுட் திரையுலகில் 70 வயதை கடந்து விட்டாலும், அன்றும், இன்றும், என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் புகழப்படுபவர் ரஜினிகாந்த். ஒரு குணச்சித்திர நடிகராக அறிமுகம் ஆகி, வில்லன், ஹீரோ என தன்னை தானே செதுக்கி கொண்டவர். தன்னுடைய முழு முயற்சியால் இவருக்கு இப்படி பட்ட வெற்றி கிடைத்தது என்றால் அது மிகையல்ல.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... கடந்த 40 ஆண்டு கால சினிமா வரலாற்றையும், 25 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றையும் இவர் பெயர் இல்லாமல் எழுதிவிட முடியாது. சாதாரண பஸ் கண்டக்டருக்கு, பாலசந்தர் என்ற குருநாதரும், எஸ்.பி.முத்துராமன் என்ற மாஸ் இயக்குநரும் கிடைக்க, திரையில் பல மாயங்கள் புரிந்து நாடுகள் கடந்தும் கோடானகோடி ரசிகர்களைப் பெற்று அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாக சிம்மாசனமிட்டு உட்கார்ந்திருக்கிறார்.
இவரின் அரசியல் நுழைவிற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்திருந்த வேளையில் தனது உடல்நிலை காரணமாக அரசியல் நுழைவை ரஜினி புறக்கணித்து ரசிகர்களின் நீண்ட நாள் கனவை பொய் ஆக்கினார். இருந்தும் ரஜினி மீதான பற்று சிறுத்தும் ரசிகர்களுக்கு குறைந்ததாக தெரியவில்லை. சமீபத்தில் அவரது பிறந்தநாளில் நுற்றுக்கணக்கான ரசிகர்கள் ரஜினியின் வீட்டின் முன்பு குவிந்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர்.
இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் நானுமதிக்கப்பட்டிருந்த ரசிகருக்கு ரஜினி ஆறுதல் கூறியிருந்தார். இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த ரசிகரின் மகள் சௌமியா உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதை அறிந்த ரஜினி ரசிகரை காணொளி மூலம் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.
"
"
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.