
வெங்கட் பிரபு (Venkat Prabhu) இயக்கத்தில் சிம்பு நடித்திருந்த படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்திருந்தனர்.
பல்வேறு தடைகளை தாண்டி கடந்த மாதம் 25-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதோடு வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்தது. மாநாடு படத்தை சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் கொண்டாடினர்.
நடிகர் ரஜினிகாந்த், வெங்கட் பிரபு, சிம்பு, எஸ்.ஜே.சூர்யா உள்பட படக்குழுவினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தார். அதேபோல் சிவகார்த்திகேயன், அனிருத், ஹரிஷ் கல்யாண், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பிரபலங்களும் மாநாடு படக்குழுவினரை வெகுவாக பாராட்டினர்.
மாநாடு (Maanaadu) படத்தில் சிம்புவின் நடிப்புக்கு எந்த அளவு பாராட்டுக்கள் கிடைத்ததோ அதே அளவு, எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பும் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக இப்படத்தில் அவர் பேசும் ‘வந்தான்.... சுட்டான்... போனான்... ரிப்பீட்டு’ என்கிற வசனம் மிகவும் வைரலானது. மீம் கிரியேட்டர்களுக்கு தீணி போடும் விதமாக இந்த வசனம் அமைந்தது.
இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த பிரியாணி கடை உரிமையாளர் ஒருவர், தனது கடையின் விளம்பரத்திற்காக அந்த வசனத்தை பயன்படுத்தி உள்ளார். ‘வந்தாங்க... சாப்பிட்டாங்க.. போனாங்க... ரிப்பீட்டு, முடியல தலைவரே’ என்ற வாசகத்துடன் கூடிய அந்த போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள எஸ்.ஜே.சூர்யா, அதில் தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.