கபாலியை முறியடிக்குமா....??? பைரவா.....!!!

 
Published : Dec 04, 2016, 04:02 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
கபாலியை முறியடிக்குமா....??? பைரவா.....!!!

சுருக்கம்

இளையதளபதி விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ்  நடித்து முடித்துள்ள 'பைரவா' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு புறம் இந்த படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 
சமீபத்தில் 'பைரவா' படத்தின் கோவை பகுதி ரிலீஸ் உரிமை மிகப்பெரிய தொகைக்கு வியாபாரம் ஆனதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் கேரளா ரிலீஸ் உரிமை குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
 
இந்த படத்தின் கேரளா உரிமை ரூ.7.3 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் முந்தைய படமான 'தெறி' படத்தின் கேரள உரிமை ரூ.5.6 கோடிக்கு வியாபாரம் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதே சமயம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' திரைப்படம் ரூ.8.5 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ள நிலையில் 'பைரவா' திரைப்படம் இந்த தொகையை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது, பல விஜய் ரசிகர்கள் கபாலி பட விற்பனையை ஒரு இடத்திலாவது பைரவா முறியடுக்குமா என்கிற ஆவலுடன் இருக்கின்றனர்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கடைசியில் மீனாவிடம் 'சென்டிமென்ட்' டிராமாவை அரங்கேற்றிய தங்கமயில்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 விறுவிறுப்பு!
அவதார் 3 படத்துக்கே தண்ணிகாட்டிய துரந்தர்... பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை தட்டிதூக்கி சாதனை