
அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளின் வயிற்றில் ஒரே நேரத்தில் பால் வார்த்திருக்கும் அஜீத்தின் அரசியல் அறிக்கையால் பி.ஜே.பி.யினரை விட அதிக காண்டுக்கு ஆளாகியிருப்பது ரஜினி ரசிகர்களின் வட்டாரமே என்பதை வலைதளங்களில் பகிரப்படும் சில ரஜினி ரசிகர்களின் பதிவுகள் பளிச்சென்று காட்டுகின்றன.
அறிக்கையில், ரசிகர்கள் மீது இவ்வளவு பாசம் கொண்ட அஜீத் ஏன் ‘விஸ்வாசம்’ படம் தொடர்பாக உயிரிழந்த மூன்று பேருக்காக ஒரு வரி கூட உருகவில்லை என்று கேள்வி கேட்கிறார்கள்.
'எனது ரசிகர்களிடம் எனது வேண்டுகோள் என்னவென்றால் நான் உங்களிடம் எதிர்பார்ப்பது எல்லாம், மாணவர்கள் தங்களது கல்வியில் கவனம் செலுத்துவதும், தொழில் மற்றும் பணியில் உள்ளோர் தங்களது கடமையைச் செவ்வனே செய்வதும், சட்டம் ஒழுங்கை மதித்து நடந்து கொள்வதும், ஆரோக்கியத்தின் மீது கவனம் வைப்பதும்,வேற்றுமை கலைந்து ஒற்றுமையுடன் இருப்பது, மற்றவர்களுக்கு பரஸ்பர மரியாதைசெலுத்துவதும், ஆகியவை தான்’ என்று கூறும் அஜீத் ஏன் பிளாக்கில் டிக்கட் வாங்கிக் காசைக் கரியாக்குகிற, லட்சக்கணக்கில் செலவழித்து போஸ்டர் அடித்து பாலாபிஷேகம் செய்து வாழ்வைப்பாழடிக்கிற தொண்டர்களைக் கண்டிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.
என் படத்தை பிளாக்கில் டிக்கட் வாங்கியோ, அதிக விலைகொடுத்து வாங்கியோ பார்க்காதீர்கள்’ என்று தொடர்ந்து அறிக்கை விடும் சிம்புவின் அறிக்கை அளவுக்குக் கூட ஒர்த் இல்லை இந்த அஜீத்தின் அறிக்கை என்கிறது ரஜினி ரசிகர் வட்டாரம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.