rajamouli praises ranbir :பாலிவுட்டில் யாரும் செய்யாத காரியம்..ரன்பீர் கபூரின் செயலால் அதிர்ச்சியான ராஜமவுலி..

Kanmani P   | Asianet News
Published : Dec 18, 2021, 01:53 PM IST
rajamouli praises ranbir :பாலிவுட்டில் யாரும் செய்யாத காரியம்..ரன்பீர் கபூரின் செயலால் அதிர்ச்சியான ராஜமவுலி..

சுருக்கம்

rajamouli praises ranbir kapoor : மேடைக்கு செல்லும் போது இயக்குனர் ராஜமவுலியின் கால்களை தொட்டு  வணங்கியுள்ளார் ரன்பீர் கபூர். 

பல தாமதங்களுக்குப் பிறகு  “ பிரம்மாஸ்திரா ” , செப்டம்பர் 9, 2022 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. அமிதாப் பச்சன் , ரன்பீர் கபூர் மற்றும் அலியா பட் நடித்துள்ள அயன் முகர்ஜியின் பிரம்மாண்டமான படமான  “ பிரம்மாஸ்திரா ” வில்  நாகார்ஜுனா அக்கினேனி மற்றும் மௌனி ராய் ஆகியோரும் நடித்துள்ளனர்.  இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இந்திய புராணங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நாயகன் சிவன் பிரம்மாஸ்திரத்துடன் தனக்கு ஒரு மர்மமான தொடர்பு இருப்பதை உணருவது போன்ற கதையமைப்பு கொண்டது.  முன்னதாக இதன் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிடுந்தது. 

இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தெலுங்கு மொழியில் வெளியாகும் இந்த படதிற்கான ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்டுள்ளார் ராஜமவுலி. அவர் மேடைக்கு செல்லும் போது இயக்குனர் ராஜமவுலியின் கால்களை தொட்டு  வணங்கியுள்ளார் ரன்பீர் கபூர். இது தொடர்பாக பேசிய ராஜமவுலி, பாலிவுட் பிரபலங்கள் யாரும் இதுவரை இயக்குனரின் காலை தொட்டு வணங்கியதில்லை. இதற்காக ரன்பீர் கபூருக்கு மனமார்ந்த நன்றி தெரிவிப்பதார். அதோடு இந்த படம் மற்றுமொரு பாகுபலி போல உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ராஜமௌலி தெரிவித்தார்.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!