Priyanka Chopra controversy :'நிக்கின் மனைவி என அழைக்க வேண்டாம்'ஆவேசப்பட்ட பிரியங்கா..மீண்டும் பற்றிய சர்ச்சை

Kanmani P   | Asianet News
Published : Dec 18, 2021, 12:51 PM IST
Priyanka Chopra controversy :'நிக்கின் மனைவி என அழைக்க வேண்டாம்'ஆவேசப்பட்ட பிரியங்கா..மீண்டும் பற்றிய சர்ச்சை

சுருக்கம்

Priyanka Chopra controversy : தன்னை ‘நிக் ஜோனாஸின் மனைவி’ என்று குறிப்பிடும் செய்திகளை கடுமையாக பிரியங்கா சோப்ரா சாடியுள்ளார்.

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல்வேறு திரையுலகில் பிசியாக நடித்து வரும் பிரியங்கா சோப்ரா, தன்னுடைய 38 வயதிலும் டாப் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ராவின் மவுசு திருமணத்திற்கு பிறகும் கூட சரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். 

குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான பிரியங்கா சோப்ரா, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்து 2018ம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார். 

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர், நடிகை பிரியங்கா சோப்ரா, இன்ஸ்டாகிராமில் தனது பெயருக்கு பின்னால் இருந்த தனது கணவர் நிக் ஜோனசின் பெயரை நீக்கினார். இதையடுத்து, அவர் நிக் ஜோனசை விவாகரத்து செய்ய உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவின. பின்னர் விவகாரத்திற்கு எந்த வாய்ப்பும் இல்லை என பிரியங்கா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மனைவி என்று குறிப்பிட்டு என் திறமைகளை வெளிப்படுத்த என்ன அவசியம் என குறிப்பிட்டுள்ள ஸ்க்ரீன் ஷாட்டுகளை இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பிரியங்கா. அதில், பிரான்ஸில் வெளியான படத்தின் ப்ரோமோஷனின் போது தன்னை நிக்கின் மனைவி என் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை கண்டித்துள்ள பிரியங்கா, எனது திறமையை வெளிப்படுத்த ஏன் கணவரின் பெயரை  சேர்க்க வேண்டும். இவ்வாறு தான் பெண்களின் தனித்துவம் பறிக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!