பிரிந்து விட்டதாக கூறப்பட்ட 'ராஜா ராணி' சீரியல் நடிகைக்கு அடுத்த மாதம் டும் டும் டும்! ரசிகர்கள் வாழ்த்து !

Published : Aug 25, 2019, 02:55 PM IST
பிரிந்து விட்டதாக கூறப்பட்ட 'ராஜா ராணி' சீரியல் நடிகைக்கு அடுத்த மாதம் டும் டும் டும்! ரசிகர்கள் வாழ்த்து !

சுருக்கம்

பிரபல சீரியல் நடிகை ஷப்னம், திருமணம் நின்று விட்டதாக கூறப்பட்ட நிலையில்,  தற்போது அவருடைய திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த, இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்த சீரியலில் நடித்து பிரபலமானவர் ஷப்னம். இவர் நடித்த 'தெய்வமகள்',  'ராஜா ராணி' சீரியல் முடிவடைந்து விட்டாலும், பலரது நினைவை விட்டு நீங்காத சீரியல்களாக உள்ளது.

இந்நிலையில் இவர், அவருடைய உறவினர் ஆர்யன் என்பவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் கடந்த வருடம் திருமண நிச்சயதார்த்தம், மிக பிரமாண்டமாக நடந்தது. இதில் பல சீரியல்  பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

மேலும் திருமணம் , பிப்ரவரி மாதம், நடைபெறும் என இவர்களுடைய தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. ஆனால், சொன்னது போல் திருமணம் நடைபெறவில்லை. எனவே இவர்களுடைய திருமணம் நின்றுவிட்டதாக பல தகவல்கள் உலா வந்தபோதும், ஷப்னம் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் கூறவில்லை.

இந்நிலையில் நீர் போனதாக கூறப்பட்ட ஷப்னம் - ஆர்யன் திருமணம் , செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி, அவர்களுடைய சொந்த ஊரில்  நடைபெற உள்ளதாகவும், திருமணத்தை தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சி, செப்டம்பர் 8 தேதி நடைபெறும் என  தகவல் வெளியாகியுள்ளது . இதைத்தொடர்ந்து இவர்களுக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்