11 வருஷ லவ்... காதல் பரிசோடு புரபோஸ் பண்ணிய சீரியல் நடிகர்... அன்போடு ஏற்றுக்கொண்ட சமந்தா - வைரலாகும் வீடியோ

By Ganesh A  |  First Published Aug 23, 2023, 12:33 PM IST

குஷி படத்தின் புரமோஷனில் பிசியாக இருக்கும் நடிகை சமந்தாவை நேரில் சந்தித்து சீரியல் நடிகர் ஒருவர் தன்னுடைய காதலை வெளிப்படுத்தி இருக்கிறார்.


நடிகை சமந்தா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்பது அனைவரும் அறிந்ததே. நாக சைதன்யாவுடனான திருமண முறிவுக்கு பின்னர் சினிமாவில் பிசியாகி உள்ள சமந்தா, அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வந்தார். இடையே அவருக்கு மயோசிடிஸ் என்கிற அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்ட போதும், சில மாதங்கள் ஓய்வில் இருந்த சமந்தா அந்த நோய் பாதிப்பு முழுமையாக குணமடையும் முன்னரே படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார்.

தன்னால் படத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மிகவும் ரிஸ்க் எடுத்து தன்னுடைய கைவசம் உள்ள படங்களில் நடித்து முடித்துள்ளார் சமந்தா. அப்படி அவர் நடிப்பில் உருவான படம் தான் குஷி. இப்படம் வருகிற செப்டம்பர் 1-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இதன் புரமோஷன் பணிகளில் பிசியாக இருக்கும் சமந்தாவிடம், பிரபல சீரியல் நடிகர் ஒருவர் காதலை சொல்லியுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது.

Latest Videos

அவர் வேறுயாருமில்லை, விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் 2-ம் பாகத்தில் நடித்து வரும் நடிகர் பிரதோஷ் தான். சமந்தாவின் தீவிர ரசிகரான இவர், சில தினங்களுக்கு முன்னர் ஏர்போர்டில் எடுத்த வீடியோ ஒன்றை பதிவிட்டு, தன்னுடைய காதலியை சந்திக்க போகிறேன் என்றும், 11 வருடங்களாக காதலித்து அவரை முதன்முறையாக சந்திக்கப்போகிறேன் என்றும் கூறி இருந்தார்.

இதையும் படியுங்கள்... ரவுடியுடன் ரஜினிக்கு சகவாசமா? உபி-யில் பல கொலைகளில் தொடர்புடைய டான்-ஐ சந்தித்த சூப்பர்ஸ்டார் - பின்னணி என்ன?

பின்னர் தன்னுடைய காதலியை சந்தித்துவிட்டதாக மற்றொரு வீடியோ ஒன்றை பதிவிட்டார். அதைப் பார்த்து அனைவரும் ஷாக் ஆகினர். ஏனெனில் அவர் 11 வருஷமாக காதலித்து வந்தது நடிகை சமந்தாவை தானாம். குஷி பட புரமோஷனின் போது சமந்தாவை சந்தித்த பிரதோஷ், அவரிடம் அழகிய பிராஸ்லேட் ஒன்றை பரிசாக கொடுத்து தன்னுடைய காதலை வெளிப்படுத்தி உள்ளார். அதைப் பார்த்து நெகிழ்ந்துபோன சமந்தா, பிரதோஷின் காதல் பரிசை அன்போடு ஏற்றுக் கொண்டதோடு, அதை அவர் கையாலேயே போட்டுவிடும் படி கூறி அணிந்துகொண்டார். 

சமந்தா பார்த்த குஷியில் திளைத்து போன பிரதோஷ், இந்த எமோஷனலான தருணம் குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளதாவது : “மனசுல பட்டத சொல்றேன். நீங்க ஆரோக்கியமா, சந்தோஷமா இப்படி சிரிச்சுகிட்டே 100 வருஷம் நல்லா இருக்கனும். என்னோட வாழ்த்து மற்றும் பிரார்த்தனை எப்போதுமே உங்களுக்காக இருக்கும். லவ் யூ” என குறிப்பிட்டுள்ளார். அவர் சமந்தாவிடம் காதலை சொன்ன வீடியோவுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளன.

இதையும் படியுங்கள்... லியோ படத்தில் இந்த விஜய் டிவி பிரபலமும் இருக்காரா?.. இன்னும் எத்தனபேர ஒளிச்சி வச்சிருக்காங்களோ!

click me!