
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம், எப்படியும் காயத்ரி வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , ஒரு போட்டியில் வென்றதன் மூலம் காயத்ரி இந்த வாரம் எலிமினேஷனில் இருந்து தப்பித்து விட்டார்.
இதன் காரணமாக அடுத்த இடத்தில் இருந்த சக்தி இந்த வாரம் வெளியேறினார். இந்நிலையில் தற்போது காயத்ரி அனைவர் மீதும் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஓவியா மீது எப்படி தன்னுடைய கோபத்தை நெருப்பாக வெளிப்படுத்தினாரோ அதே போல் இப்போது ரைசா மீது கோபத்தை காட்டி வருகிறார்.
இதனை ரைசா சினேகனிடம் கூறுகிறார், அதற்கு சினேகன் இது ரைசா மீது இருந்த கோபம் இல்லை சினேகன் மீது அவருக்கு இருக்கும் கோபம் என தெரிவித்தார். மேலும் தான் முதலில் ஓவியாவிற்கு பரிந்து பேசியதும் தற்போது உனக்காக பேசுவதும் அவருக்கு பிடிக்கவில்லை என்பது போல் கூறுகிறார்.
இதனை கேட்டதும் ரைசா, தப்பு தப்பான தமிழில் இனி எனக்கு, அண்ணன் தங்கை என சென்டிமென்டும் வேண்டாம், எல்லாரும் போய் சாவுங்க என்று கூறுப்பது போல் இன்றய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.