
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானவர் ஓவியா. இவரின் குணத்தால் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்கள் மனதையும் கொள்ளையடித்து, இளைஞர்களின் கனவு கன்னியாக இருக்கிறார்.
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் போனதால், இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. இதன் காரணமாக தற்போது மீண்டும் ஓவியாவை பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டதாக கூறப்பட்டது.
மேலும் மீண்டும் இந்த நிகழ்ச்சிக்குள் ஓவியா கலந்துக்கொள்ள, நிகழ்ச்சியாளர்கள் ஒரு நாளைக்கு 5 லட்சம் வரை சம்பளமாக கொடுக்க உள்ளதாகவும் தகவலைகள் வெளியானது.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, பிக் பாஸ் போட்டியின் விதி படி பிக் பாஸ் எந்த ஒரு போட்டியாளரையும் வெளியேற்றவும், உள்ளே வர வரவழைக்கவும் அதிகாரம் உள்ளது என்கிற ஒரு பாண்ட் போட்டு தான் அழைக்க படுகிறார்கள், இதுக்காக அவர்களிடம் கையெழுத்துக்கும் வாங்கப்படுகிறது.
மனஅழுத்தம் காரணமாக ஓவியா வெளியேற்றப்பட்டார், ஆனால் தற்போது உடல் நலம் சீராக உள்ளதால் இதன் அடிப்படையில் தான் ஓவியாவை அழைக்கின்றனராம் பிக் பாஸ் நிகழ்ச்சியாளர்கள். மேலும் இவரது ரசிகர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் மீண்டும் ஓவியா கலந்து கொள்ள வேண்டும் என விருப்படுவதால் மட்டுமே ஓவியா ஒரு வேளை கலந்து கொள்ளலாம் என்றும், விருப்பப்பட்டு ஓவியா இதில் கலந்து கொள்ள விருப்பமில்லாமல் தான் இருப்பதாக ஓவியா தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.