
தானத்தில் சிறந்த தானம் ரத்ததானம் என்பார்கள். அதைவிட சிறந்த தானம் உடலுறுப்பு தானம் என்றே சொல்லலாம்.
நாம் இறந்த பிறகும், வாழக்கூடிய ஒரு வாய்ப்பு எதுவென்றால் அது உடலுறுப்பு தானத்தின் மூலமாகத்தான் என்பது தான்உண்மை.இதன் மூலம் எத்தனையோ உயிர்களை காப்பாற்றவும் முடியும்.
அந்த வரிசையில் தாமாகவே முன்வந்து, தங்கள் உடலுருப்புகளை தானம் செய்ய தயாரென சில பிரபலங்கள் முன்வந்துள்ளனர். இதனால் மக்கள் மத்தியில் ஒரு நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
சர்வதேச உடலுறுப்பு தினம்
சர்வதேச உடலுறுப்பு தினம் நேற்று கொண்டாடப்பட்டது.இதனை முன்னிட்டு பல பிரபலங்கள் உடலுறுப்பு தானத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வரிசையில் கமல் , ரஜினி, சூர்யா, மாதவன் ,விஜய் சேதுபதி, விஷால், சரத் குமார், பிரசன்னா மற்றும் சிநேகா தம்பதியர், காஜல் அகர்வால் ஆகியோர் உடல் உறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டனர்.
பிரபலங்களின் இந்த செயலுக்காக மக்கள் மத்தியில் உடலுறுப்பு தானம் குறித்து நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.