
பார்டமன் என்ற படத்தில் அறிமுகமானாவர் பிரபல நடிகையாக இருந்தவர் ரைமா இஸ்லாம் ஷிமு (45). இவர் வங்காள தேசத்தில் மிக பிரபல நடிகையாவார்..கடந்த 1998 முதல் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய அவர், 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், டி.வி நாடகங்களிலும் நடித்துள்ளதுடன் தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தார். வங்காள தேச திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் இணை உறுப்பினராகவும் இருந்தவர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ரைமா காணாமல் போனதாக, அவரது உறவினர்கள் கெரனிகஞ்ச் மாடல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். நடிகை குறித்து காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்நிலையத்திற்கு வந்த சில உள்ளூர் வாசிகள் டாக்காவின் கெரனிகஞ்சில் உள்ள ஒரு பாலத்தின் அருகே ஒரு சாக்கு மூட்டையில் பெண்ணின் சடலம் இருப்பதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கெரனிகஞ்ச் மாடல் காவல்துறையினர். சாக்குமூட்டையில் இருந்தது நடிகை ரைமாவின் உடல் என்பதை உறுதி செய்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
கடத்தல் வழக்கை கொலைவழக்காக மாற்றிய காவல்துறையினர் விசாரணையில் தீவிரம் காட்டினார். அதன்படி ரைமாவின் நெருங்கிய உறவினர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய காவல்துறைக்கு திடுக்கிடும் தகவல்கள் பல கிடைத்துள்ளன. இந்த விசாரணையின் முடிவில் ரைமாவின் கணவர் பக்கம் போலீசாரின் சந்தேகப்பார்வை திரும்ப அவரிடம் விசாரித்துள்ளனர். நடிகை ரைமாவின் கணவர் ஷகாவத் அலி நோபாலிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கொலையில் தனக்குத் தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். ஷகாவத் அலியின் நண்பர் அப்துல்லா ஃபர்ஹாவிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் செல்வாக்கு மிக்க பிரபல நடிகர் ஒருவருக்கு நடிகை கொலையில் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. அதோடு ரைமா உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நடிகை முந்தையநாள் கொடூரமாக தாக்கப்பட்டு அதன் விளைவாக உயிர் இழந்துள்ளதை குறிப்பிட்டுள்ளனர். விசாரணையின் போக்கில் இன்னும் பாலா பிரபலங்கள் சிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் சொல்கிறது...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.