நல்ல செய்தி சொன்ன ராகவா லாரன்ஸ்... கொரோனாவில் இருந்து மீண்ட காப்பக குழந்தைகள்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 5, 2020, 11:42 AM IST
Highlights

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் தனது முகநூலில் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். குறிப்பாக இந்த கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இதுவரை எந்த முன்னணி நடிகரும் கொடுக்க முன் வராத பெரிய தொகையான 3 கோடி ரூபாயை நிதியாக அறிவித்தார். அதோடு நின்றுவிடாமல், நலிந்த  சினிமா கலைஞர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் நலிந்த தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு லட்சங்களை வாரி வழங்கினார். 

அதே போல் ஊரடங்கால் பாதிக்கப்பட்டு, வேலை இல்லாமல் கஷ்டப்படும் அடித்தட்டு மக்களுக்கு தன்னுடைய நண்பர்கள் மற்றும் குழுவினருடன் சேர்ந்து, தினமும் பலருக்கு உணவு வழங்கி வருகிறார். அப்படி தேடி தேடி உதவிகளை வாரி வழங்கிய ராகவா லாரன்ஸுக்கு இப்படி ஒரு சோதனையா? என அனைவரும் கலங்கும் அளவிற்கு வந்து சேர்ந்தது அந்த செய்தி. 

இதையும் படிங்க: கொழு, கொழுன்னு இருந்த குஷ்புவா இது?... ஓவர் ஸ்லிம் லுக்கில் மார்டன் உடையில் மனதை மயக்கும் கிளிக்ஸ்...!

நடிகர் ராகவா லாரன்ஸ் அசோக் நகரில் நடத்தி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லத்தில் கொரோனா தொற்று பரவியது உறுதி செய்யப்பட்டது. அந்த இல்லத்தில் தங்கியிருந்த 10 மாணவிகள், 5 மாணவர்கள், 5 பணியாளர்கள் உட்பட 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அங்கு பணியாற்றி வந்த சமையல் வேலை செய்யும் பெண்கள் மூலமாக கொரோனா பரவியதாக கூறப்பட்டது. காப்பக குழந்தைகளின் நிலையை எண்ணி அனைவரும் சோகத்தில் மூழ்கிய சமயத்தில் ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 

அதில், தான் செய்த சேவைகள் குழந்தைகளை காப்பாற்றும் என்று உறுதியாக நம்புவதாகவும், மருத்துவர்கள் குழந்தைகளின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி விரைவில் குழந்தைகளுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, ரிசல்ட் நெகட்டீவ் என்று வந்துவிட்டால் குழந்தைகள் அனைவரும் மீண்டும் காப்பகம் திரும்புவார்கள் என்றும் தெரிவித்திருந்தார். 

இதையும் படிங்க: டீப் நெக் ஓபன்... டாப் ஆங்கிளில் கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி... எல்லை மீறும் சாக்‌ஷி...!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் ஒரு வாரத்திற்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் தனது முகநூலில் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். காப்பக குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள லாரன்ஸ், “நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் உடன் ஒரு நல்ல செய்தியை பகிர்ந்து கொள்ள போகிறேன். எனது நம்பிக்கையின் படி கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக காப்பகம் திரும்பியுள்ளனர்”. 

இதையும் படிங்க: 

“அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்களுக்கும், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்களின் உடனடி உதவிக்கு எனது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தன்னலமற்ற சேவையில் ஈடுபட்டிருக்கும் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. நான் எதிர்பார்த்தது போலவே எனது சேவை, என் குழந்தைகளை காப்பாற்றிவிட்டது. அவர்களுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி”  என்று பதிவிட்டுள்ளார். 

click me!