“நண்பன் விஜய்க்கு நன்றி”... ராகவா லாரன்ஸின் கோரிக்கைக்கு உடனடியாக செவி சாய்த்த தளபதி...!

By Kanimozhi PannerselvamFirst Published May 10, 2020, 1:06 PM IST
Highlights

இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டனியில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தை காண ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் காத்திருக்கின்றனர். இந்த படத்தில் இருந்து வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. குறிப்பாக வாத்தி கம்மிங் பாடல் டிக்-டாக் மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பட்டையைக் கிளப்பி வருகிறது. சமீபத்தில் இரண்டு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி ஒருவர் வாத்தி கம்மிங் பாடலுக்கு கீ-போர்டு வாசிக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. 

இதையும் படிங்க: சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டியா இது?... இளம் வயதிலேயே கவர்ச்சியில் ஓவர் தாராளம் காட்டிய போட்டோ....!

இந்நிலையில் அந்த மாற்றுத்திறனாளியின் வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்த ராகவா லாரன்ஸ், “நண்பன் விஜய் மற்றும் அனிருத்திற்கு வேண்டுகோள். இவர் தன்சென். என்னுடைய மாற்றுத்திறனாளி குரூப்பில் உள்ளார். அவரது என்னுடைய காஞ்சனா படத்தில் நடித்துள்ளார். அவர் லாக்டவுன் நேரத்தில் மூன்று நாட்கள் பயிற்சி செய்து வாத்தி கமிங் பாடலை வாசித்துள்ளார். அவரது ஆசை அனிருத் சார் இசையில் ஒரு சிறிய பகுதியாவது வாசிக்கவேண்டும் என்பது தான். அதை விஜய் முன்னிலையில் வாசிக்க வேண்டும். அவரது கனவு நிஜமாகும் என நம்புகிறேன்" என்று கோரிக்கை வைத்திருந்தார். 

Mindblown ! Just pure amazing talent 😍🏆🙏🏻 God bless you brother! pic.twitter.com/QK5gulR5eG

— Anirudh Ravichander (@anirudhofficial)

இதையும் படிங்க: 

இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உலகில் உள்ள அனைத்து அம்மாக்களுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள். 4 வருடங்களாக முயன்று என் அம்மாவிற்கு கோவில் கட்டினேன். அந்த கோவிலை உலகில் உள்ள அனைத்து அன்னையர்களுக்கும் சமர்பிக்கிறேன். கடவுளை வெளியில் தேடினேன். ஆனால் அவர் என் அம்மாவிற்குள்ளும், பிறரது பசியிலும் இருப்பதை உணர்ந்தேன் என்று பதிவிட்டுள்ளார். 

My Big thanks to Nanban Vijay and Anirudh sir pic.twitter.com/ZULMRngOaf

— Raghava Lawrence (@offl_Lawrence)

இதையும் படிங்க: ஊரடங்கிலும் ஓவர் கிளு கிளுப்பு... சட்டையை மட்டும் அணிந்து கொண்டு கிக்கேற்றிய கவர்ச்சி நடிகை...!

அத்துடன் மற்றொரு மகிழ்ச்சியான செய்தியையும் அறிவித்துள்ளார், நேற்று மாஸ்டர் படலை வாசித்து காட்டிய மாற்றுத்திறனாளி நபர் தன்சென் வீடியோவுடன் நண்பன் விஜய் மற்றும் அனிருத்திற்கு ஒரு வேண்டுகோள் வைத்திருந்தேன். அன்று இரவு நான் நண்பன் விஜய்யிடம் பேசினேன், அவர் லாக்டவுன் முடிந்த பிறகு அந்த நபரை அழைத்து வர சொல்லியிருக்கிறார். விஜய் மற்றும் அனிருத் முன்பு மாஸ்டர் வாத்தி கம்மிங் பாடலை வாசித்து காட்ட கூறியுள்ளார். மாற்றுத்திறனாளி இளைஞர் கண்ட கனவை நனவாக்கிய நண்பன் விஜய் மற்றும் அனிருத் சாருக்கு மிகப்பெரிய  நன்றி. சேவையே கடவுள் என்று பதிவிட்டுள்ளார்.

click me!