இந்நிலையில் "ரா ரா" பாடலில் மட்டுமே காட்டப்பட்ட சந்திரமுகி, வேட்டையன் ராஜா கதாபாத்திரங்களை இரண்டாம் பாகம் முழுவதும் காட்டப்போகிறார்களாம்.
மலையாளத்தில் 1993ம் ஆண்டு வெளியான திரைப்படம் மணிசித்ரத்தாலு. மலையாள திரையுலகின் முன்னணி இயக்குநரான ஃபாசில் இயக்கத்தில் மோகன் லால், ஷோபானா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குநர் பி.வாசு ஆப்தமித்ரா என்ற பெயரில் கன்னடத்தில் ரீமேக் செய்தார். மலையாளம் மற்றும் கன்னடத்தில் சக்கப்போடு போட்ட அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டார் பி.வாசு.
இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2005ம் ஆண்டு சந்திரமுகி திரைப்படம் வெளியானது. சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்த இந்த திரைப்படத்தில் பிரபு, ஜோதிகா, நயன்தாரா, நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சூப்பர் ஸ்டாரின் அசத்தலான ஸ்டைல், ஜோதிகாவின் மிரட்டலான நடிப்பு இரண்டும் சேர்ந்து படத்தை கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஓடவைத்தது.
இதையும் படிங்க: கண்ணீர் விட்டு கதறிய நயன்தாரா... இயக்குநர் காலில் விழுந்து அழுத வைரல் வீடியோ...!
ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்த தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான சந்திரமுகி கதை இரண்டு முக்கிய கதாபாத்திரங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். ஒன்று வேட்டையன் ராஜா, மற்றொரு கதாபாத்திரம் ஜோதிகா ஏற்று நடித்த சந்திரமுகி. இந்நிலையில் "ரா ரா" பாடலில் மட்டுமே காட்டப்பட்ட சந்திரமுகி, வேட்டையன் ராஜா கதாபாத்திரங்களை இரண்டாம் பாகம் முழுவதும் காட்டப்போகிறார்களாம்.
இதையும் படிங்க: பெரிய இடத்து மாப்பிள்ளையாகும் பிரபாஸ்?... மெகா ஸ்டார் குடும்பத்து பெண்ணை கைபிடிக்க போறாராம்...!
அதாவது சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் வேட்டையன் மன்னன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் முழுக்க வேட்டையன் மன்னன், சந்திரமுகி இடையே நடக்கும் மோதல் தான் என்று கூறப்படுகிறது. இன்னும் சந்திரமுகி கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார்கள் என்பது உறுதி செய்யப்படவில்லை.